இன்றைய ராசிபலன் : 05 அக்டோபர் 2024 – Daily Horoscope

Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (அக்டோபர் 5, 2024 சனிக் கிழமை) இன்று சந்திரன் பகவான் துலாம் ராசியில் சுவாதி, விசாகம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று மரண யோகம் கூடிய தினம். இன்று மீனம் ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.

இன்றைய ராசிபலன் : 05 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 5.10. 2024, குரோதி வருடம் புரட்டாசி 19, சனிக் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் உள்ள உத்திரட்டாதி, ரேவதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று தொண்டு, சேவைகளில் ஈடுபடுவீர்கள். பணியிடத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களின் மனதில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். உங்களின் உடல் நலனில் அக்கறை தேவை. குடும்பத் தேவைக்காக அதிக பணம் செலவிட நேரிடும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். வணிகம் தொடர்பாக சில நல்ல தகவல் பெறலாம். இன்று உங்களின் நிதி நிலை பலப்படும். இன்று லாபத்திற்கான புதிய வாய்ப்புகள் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு தேர்வு தொடர்பாக ஆசிரியர்களின் உதவி கிடைக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் பெற்றோரின் ஆசீர்வாதமும், பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். குடும்ப உறவினர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்வீர்கள். இன்று மோசமான நிலையை கடக்க கடின உழைப்பு தேவைப்படும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்களின் கோபத்தை கட்டுப்படுத்தவும். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் நிதி ஆதாயம் பெற்று மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் புரிதல் சிறப்பாக இருக்கும். இன்று குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உங்கள் தாயுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இன்று உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. தகுதியானவர்களுக்கு இன்று திருமண வாய்ப்புகள் கிடைக்கும். மாமியார் வீடு மூலம் நிதி ஆதாயம் பெறுவீர்கள்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் தொடர்புடையவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி பெற முடியும். உங்களை சுற்றியுள்ள சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகளுக்கான தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனைவியுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட முடியும். இன்று உங்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முடியும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று பிறருக்கு உதவ முன் வருவீர்கள். முதியோர்களின் சேவையில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களின் மகிழ்ச்சியும், வளர்ச்சியும் அதிகரிக்கும். அரசாங்க வேலை தொடர்புடையவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் நல்ல நடத்தையைப் பேணவும். வியாபாரிகளுக்குச் சிறப்பான நாள்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் கல்வி, விளையாட்டு சிறப்பான வெற்றியை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் உடல் நலம் தொடர்பான பிரச்சனை அலைச்சலைத் தரக்கூடும். இன்று உங்கள் வேலையை முடிப்பதில் கூடுதல் கவனமும், நேரமும் தேவைப்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு முக்கிய வேலைகளை முடிக்க உதவும். இன்று உங்களுக்கு நிறைய லாபமும், புதிய வருமான ஆதாரங்களும் உருவாக்கும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நிதி அம்சங்கள் வலுவாக இருக்கும். உங்களின் செல்வம், மரியாதை, புகழ் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிப்பதில் சகோதரர்களின் உதவி கிடைக்கும். உங்களின் மனமகிழ்ச்சி அடையும். வெற்றி அதிகரிக்கும். தாயுடன் மன வருத்தம் நீங்கும். இன்று சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. உங்களின் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் அன்றாட தேவைக்காக பணம் அதிகமாக செலவிட நேரிடும். உங்கள் வேலைகளை முடிப்பதில் அதிக பிஷியாக இருப்பீர்கள். இன்று சோர்வாகவும், மன அழுத்தத்துடன் இருப்பீர்கள்.சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று வணிகத்தில் சாதகமான சூழல் இருக்கும். உங்களின் நிதி நிலை முன்பை இருக்கும். இன்று உங்களின் செலவை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.இன்று உங்கள் வேலையை சரியாக திட்டமிட்டு உழைக்கவும். சொத்து, வாகனம் வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. இன்று வாகனம் தொடர்பாக செலவுகள் ஏற்படும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சொத்து வாங்குதல், விற்பது தொடர்பான விஷயத்தில் சாதகமான நாள். இருப்பினும் ஆவணங்களைச் சரி பார்த்துக் கொள்வது அவசியம். உங்கள் துணையின் உடல்நல பிரச்சனை கவலையை தரும். எதிர்பார்த்ததை விட அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் சில மன அழுத்தத்தைச் சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் பண விஷயத்தில் கவனம் தேவை. கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் மனைவியை அவர்கள் விரும்பும் இடத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவீர்கள். தொழிலில் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்வீர்கள். இன்று மாணவர்கள் படிப்பு தொடர்பான மனச்சுமையிலிருந்து விடுபடுவீர்கள். பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கும். பெற்றோருக்கு சேவை செய்வதில் நிறுத்திச் செலவிடுவீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறீர்கள்.