இன்றைய ராசிபலன் : 25 செப்டம்பர் 2024

இன்று சந்திரன் பகவான் மிதுனம் ராசியில் மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று விருச்சிகம் ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.

இன்றைய ராசிபலன் : 25 செப்டம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 25.09.2024, குரோதி வருடம் புரட்டாசி 9, புதன் கிழமை, சந்திரன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசியில் உள்ள விசாகம், அனுஷம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பெற்றோருடன் புனித யாத்திரை செல்ல வாய்ப்புள்ளது. உங்கள் மனைவியுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் தீரும். அவர்கள் கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் நிலுவையில் உள்ள வேலையில் உள்ள வேலைகளை முடிக்க வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடு கண்டு திருப்தி அடைவீர்கள். சமூக பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பெண் நண்பரின் உதவியால் பண பலன்கள் பெறுவீர்கள். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் காதலை குடும்பத்தில் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது. நண்பரின் உதவியாளர் தொழில், வியாபாரத்தில் இருந்து தடைகள் நீங்கி வளர்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் சொந்த தொழிலில் கவனமாக இருக்கவும். எந்த முடிவை எடுத்தாலும் அதில் நிதானம், உணர்ச்சி வசப்படுதலைத் தவிர்க்கவும். இல்லையெனில் எதிர்காலத்தில் தேவையற்ற நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புதிய திட்டங்களை கவனமாக செயல்படுத்தவும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்களின் வேலை, வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கு உதவும். கடந்த சில நாட்களாக குடும்பம் மற்றும் வியாபாரம் தொடர்பாக இருந்த மன அழுத்தமான சூழ்நிலை மாறும். உங்களின் தைரியம் அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான வழக்கை நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பைப் பெறலாம். மனைவியுடன் இணக்கமான சூழ்நிலை இருக்கும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் சேமிப்பு அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான கவலைகள் நீங்கும். உடன் பிறந்தவர்களிடமிருந்து சில உற்சாகமான செய்திகளை கேட்கலாம். இன்று சுப நிகழ்ச்சி கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. இன்று கடன் கொடுப்பது, வாங்குவதைத் தவிர்க்கவும். நீங்கள் கொடுத்த கடன் தொகையை திரும்ப பெற வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று தொழிலில் குழப்பமாக இருந்த காரியங்கள் மாறி முன்னேற வாய்ப்புள்ளது. உங்களின் இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் காதல் வாழ்க்கைக்கு நேரத்தை செலவிடுவீர்கள். பிள்ளைகளின் செயல் மனதில் மகிழ்ச்சியை தரும். உங்கள் வீட்டில் விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களுக்கு புரிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வேலையை சிறப்பாக செய்து முடிக்க முடியும். புகழ் அதிகரிக்கும். மக்களின் ஆதரவு பெருகும். பெரிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு பேரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இன்று உலக சுகபோகங்களுக்காகக் கொஞ்சம் பணம் செலவழிப்பீர்கள். இன்று உங்களின் வருமானம் சிறப்பாக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் திருமணம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நாள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் பெற்றோரின் ஆலோசனை தேவைப்படும். இன்று சில விஷயங்களாக மன அழுத்த நிலையில் இருப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உடல் நிலையில் கவனமாக இருப்பதோடு, இன்னொரு விஷயத்தில் கவனம் செலுத்தவும். வெளி உணவுகளை தவிர்க்கவும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வேலை, தொழில் பயணம் செல்ல நேரிடும். தந்தையின் ஆலோசனை உங்களின் முன்னேற்றத்திற்கு உதவும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகளை முடியும் முடிக்க முடியும். சமூக பணிகளை செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டிய நாள். பெற்றோருடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று வேளையில் பதவி உயர்வு மற்றும் பண பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளை முடிக்க வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு உங்களுக்கு பிடித்த வாழ்க்கைத் துணையை அமைய வாய்ப்புள்ளது.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு லாபத்திற்கான சிறப்பான வாய்ப்புகள் உண்டு. உங்களின் திறமை அங்கீகரிக்கப்பட வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். இன்று உங்கள் வேலை விஷயத்தில் எதிரிகளின் தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளது. பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் பிள்ளைகளுடன் விளையாடி மகிழ்வீர்கள்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். இன்று பணபலம் அதிகரிக்கும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவையை நிறைவேற்ற முடியும். கடினமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் வெற்றி பெறுவீர்கள். சொத்து வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.