இன்றைய ராசிபலன் : 29 செப்டம்பர் 2024

இன்று சந்திரன் பகவான் கடகம், சிம்மம் ராசியில் ஆயில்யம், மகம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று மரண யோகம் கூடிய தினம். இன்று தனுசு ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.

இன்றைய ராசிபலன் : 29 செப்டம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 29.09.2024, குரோதி வருடம் புரட்டாசி 13, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம், சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள சேர்ந்த பூராடம், உத்திராடம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தொழிலில் அதிக லாபம் ஈட்டுவீர்கள். நீண்ட நாட்களாக பிறரிடம் சிக்கி இருந்த பணம், பொருள் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று லாபம் அதிகமாக கிடைக்கும். திருமண வாழ்க்கையில் அன்பும், நம்பிக்கையும் அதிகரிக்கும். வீட்டில் முக்கியமான வேலைகளை முடிப்பதில் நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்குத் தகுதிக்கேற்ப நல்ல வாய்ப்புகள் அமையும். வீடு, வாகனம் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் கல்வி தொடர்பான பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்புள்ளது. இன்று ஆசிரியர்களின் ஆதரவைப் பெறவும். வேலையில் இருப்பவர்கள் எதிர்காலம் தொடர்பாக அதிகம் கவலைப்படுவீர்கள். இன்று ஆசையும், அசையா சொத்துக்கள் தொடர்பாக சர்ச்சைகளைச் சந்திக்க நேரிடும். உறவினர்கள் மூலம் முன்னேற்ற சூழல் உண்டாகும். உங்களின் நிதிநிலை சற்று அழுத்தத்தைத் தரும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பண வருவாய் நிலையானதாக இருக்கும். இன்று உங்களின் முதலீடு எதிர்காலத்தில் லாபகரமான ஒப்பந்தங்கள் தரக்கூடியதாக அமையும். இன்று உங்கள் மனம் வருத்தம் அடையக்கூடியதாக இருக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுக்கு நேர்த்தை கொடுக்க முடியாமல் போகும். இன்று முக்கிய வேலைகளை முடிப்பதில் பிஸியாக இருப்பீர்கள். கொஞ்சம் பணம் அதிகமாக செலவாக வாய்ப்புள்ளது.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று தொழிலில் கடின உழைப்பிற்குப் பிறகு பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இன்று மிகுந்த உற்சாகமாக, சுறுசுறுப்பையும் காட்டி உங்கள் வேலையை முடிக்க நினைப்பீர்கள். தந்தையின் வழிகாட்டுதல் குடும்பத் தொழிலில் லாபத்தை அதிகரிக்கும். வீட்டில் மூத்த உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர், வெளிநாடு மூலம் சில நல்ல செய்திகள் தேடி வரும். பெற்றோருக்கு சேவை செய்து மகிழ்வீர்கள்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பாக நீங்கள் முக்கிய முடிவு எடுக்கும் விஷயத்தில் மிகவும் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ள சர்ச்சைகளைப் பொறுமையுடன் தீர்க்கவும். இன்று ஒருவருடன் தேவையற்ற வாக்குவாதம் அல்லது உறவில் விரிசல் ஏற்படலாம். குடும்ப செலவுகள் கட்டுப்படுத்த வேண்டிய நாள். பிறரிடம் செய்யக்கூடிய பண பரிசோதனைகளில் கவனம் தேவை. காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சமூக பணியில் ஈடுபாடு அதிகரிக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடு மனதில் ஏமாற்ற உணர்வை ஏற்படுத்தும். இன்று உங்களுக்கு தேவைக்கு ஏற்ப பணம் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க முடியும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் கடின உழைப்புக்கு ஏற்ற அதிக பலனை எதிர்பார்க்கலாம். இன்று உங்களின் சோம்பலை கைவிட்டு சுறுசுறுப்பாகச் செயல்படவும். உங்கள் தொழிலில் புதிய அனுபவத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் உங்களின் நற்பெயர் அதிகரிக்கும். முடிக்கப்படாமல் இருந்த வேலைகளையும் முடிக்க வாய்ப்பு உண்டு. மன அமைதி கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் நடத்தையில் பிடிவாதம் அதிகமாக இருக்கும். உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்வதில் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்றாலும் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இல்லையெனில் உங்களின் உறவு மோசமடையும். வியாபாரம் செய்யக்கூடியவர்கள் வெளிநாடு தொடர்பான விஷயத்தில் ஆதாயம் அடைவீர்கள். நண்பர்களுடன் உல்லாசமாக நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வீட்டுக்கு தேவையான புதிய பொருட்கள் வாங்கி மகிழ்கிறீர்கள். குடும்பத்தில் மூத்த நபர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும். இன்று உங்களுக்கு பிடித்த பொருள் அல்லது ஆவணத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். பணியிட சூழ்நிலை வலுவாக இருக்கும். வீட்டில் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும். இன்று உற்றார் உறவினர்களுடன் மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று பல நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு பிடித்த நபர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு பரிசு வாங்குவீர்கள். குடும்ப சொத்து சம்பந்தமான தகராறுகள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் கடினமான சூழலைச் சமாளிப்பீர்கள். இன்று லாபகரமான செயலில் ஈடுபடுவீர்கள்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஆன்மீக யாத்திரை செல்ல வாய்ப்புள்ளது. இன்று செலவுகள் அதிகரிக்கும். உங்களின் உழைப்புக்கு ஏற்ற லாபமும் எதிர்பார்க்கலாம். சில முடிக்கப்படாத வேலைகளை முடித்து மன நிறைவடைவீர்கள். தந்தையின் உடல்நிலை சற்று மோசம் அடையும். மாணவர்கள் உயர் கல்விக்கான பாதை எளிமையாகும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று புதிய சொத்து வாங்குதல் அல்லது வீடு கட்டுதல் தொடர்பாக பணம் அதிகமாக செலவாகும். இன்று உங்களின் வருமானம் மற்றும் செலவு இடையே சமநிலையைப் பராமரிக்கவும். உங்களின் புதிய வியாபாரத் திட்டத்தை தொடங்கலாம். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் உங்களின் திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைக்கும். இந்த திருமண உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதலுக்கு இனிமையான சூழல் இருக்கும்.