இப்படியும் ஒரு சோதனை

அரச அதிகாரிகளின் அலட்சியத்தால், நாட்காட்டியிலேயே இல்லாத பெப்ரவரி 30 ஆம் திகதி நடைமுறைச் சோதனைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சாரதி பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒருவர், சாரதி அனுமதிப்பத்திரத்தை எடுப்பதற்காக விண்ணப்பித்துள்ளார். அவ்வாறு விண்ணப்பிக்கும் சகலருக்கும் நடைமுறை சோதனைக்கான (Practical test date) திகதி அறிவிக்கப்படும்.

எனினும், அம்பாறை மோட்டார் திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள சோதனைக்கான திகதியே, விண்ணப்பித்தவருக்கு சோதனையாகியுள்ளது.இப்படியும் ஒரு சோதனை-oneindia news

அதில், பதிக்கப்பட்ட இறப்பர் முத்திரையில், 2024 பெப்ரவரி 30ஆம் திகதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவொரு வருடத்திலும் பெப்ரவரி மாதத்தில் 30 ஆம் திகதி இல்லை. இந்தநிலையில் இவ்வருடம் 30 ஆம் திகதி வருமாறு அழைத்துள்ளனர். அவ்வாறு அழைக்கப்பட்டமையே பெரும் சோதனையானது என பலரும் தெரிவிக்கின்றனர்.