மாத்தளை – வில்கமுவ எலவனாகந்த பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
26 வயதுடைய மேல் மலகஸ்வெவ புளியங்குளத்தை சேர்ந்த ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மதவாச்சியிலிருந்து அம்பாறை பிரதேசத்திற்கு மரக்கன்றுகளை வெட்டுவதற்காக பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு உழவு இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த இரண்டு உழவு இயந்திரங்களில் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் மற்றைய உழவு இயந்திரத்துடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்