ஈரோட்டில் பேருந்துக்குள் கொட்டிய மழை நீரால் பயணிகள் அவதி

ஈரோடு பேருந்து நிலையம்ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது, இந்நிலையில் ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து பி3 என்ற டவுன் பஸ் பவானி வரை இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பஸ்ஸில் தினந்தோறும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான சென்று வருகின்றனர்.

லேசானது முதல் கனமழை

இந்த பஸ் ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து வீரப்பன்சத்திரம், கனி ராவுத்தூர் குளம், மாமரத்துப்பாளையம், கரும்புக்காடு, சித்தோடு, ஆவின் நிலையம், லட்சுமி நகர் பைபாஸ் வழியாக பவானி வரை இயக்கப்பட்டு வரும் நிலையில் ஈரோடு மாநகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மாலை நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக லேசானது முதல் கனமழை வரை பெய்தது வருகின்றது.

பேருந்துக்குள் வந்த மழைநீர்

வழக்கம் போல b3 டவுன் பஸ் ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து பவானிக்கு பயணிகளை ஏற்று சென்று கொண்டிருந்த பொழுது மழை பெய்ததால்பஸ்சின்மேற்கூறையில் உள்ள ஓட்டையின் வழியாக மழைநீர் பேருந்துக்குள் வந்தது, அதனால் மழையில் நனைந்தபடியே மக்கள் பயணித்தனர்.

அமர்ந்து செல்ல முடியாமல் பயணிகள் அவதி

மேலும் பஸ்ஸின் இருக்கையில் மழை நீர் கொட்டியதால் இருக்கையில் அமர்ந்து செல்ல முடியாமல் நனைந்தபடி மக்கள் அவதி அடைந்தனர், பஸ்ஸில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை

இது போன்ற ஓட்டை உடைசலாக உள்ள பேருந்துகளை மாற்றி விட்டு புதிய பஸ்களை மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். பேருந்தில் குழந்தைகள் பெரியவர்கள் மற்றும் நோயாளிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சென்றுவரும் நிலையில் இதுபோல மழை நீர் பேருந்துக்குள் வந்தால் எப்படி பயணம் செய்வது என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்