உக்ரைன் சென்ற ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் அனலேனாக்கு ரஷ்ய ட்ரோன் ஒன்று அச்சத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான Annalena Baerbock, ஞாயிற்றுக்கிழமை, உக்ரைனிலுள்ள Mykolaivநகருக்குச் சென்றிருந்தார்.
ஜேர்மன் நிதி உதவி மூலம் அமைக்கப்பட்டிருந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றைப் பார்வையிடுவதற்காக அவர் அங்கு சென்றிருந்தார்.
அப்போது, திடீரென சைரன்கள் ஒலிக்கத் துவங்கின. அதாவது, ரஷ்ய ட்ரோன் ஒன்று வானில் பறந்தது தெரியவந்ததையடுத்து, மக்களை எச்சரிப்பதற்காக அந்த எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்பட்டது.
உடனடியாக, Annalena , அவரது குழுவினரும், அங்கிருந்து பாதுகாப்பான இடம் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விடயம் என்னவென்றால், அத்தகைய ட்ரோன்கள் வானில் பறக்கிறது என்றால், அதன் பின்னாலேயே ரஷ்ய ஏவுகணை ஒன்றும் பறந்துவந்து தாக்கப்போகிறது என்பது பொருள். ஆக, அதிவேகத்தில் செல்லும் கவச வாகனம் ஒன்றில் ஏறிய Annalena அவரது குழுவினரும், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, அங்கிருந்து உயிர் தப்ப ஓட்டம் பிடித்தனர்.