அமெரிக்கா அதிபர் தேர்தல் தேர்தல் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஜோ பைடன் விலகினார். இதையடுத்து ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியில் இறங்கினார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி தரப்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இவா்கள் இருவருக்கும் இடையே கடுமையான பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. பிரச்சார மேடைகளில் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக சாடி வருகின்றனா்.
அமெரிக்காவின் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்ட கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸ் தான் அதிபராக தோ்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது. இதனால் டிரம்ப் தனது பிரச்சார முறைகளில் சில மாற்றங்களை செய்துள்ளார். எனவே கமலா ஹாரிசை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். எனினும் கமலா ஹாரிஸும், டிரம்ப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
கடந்த 10 ஆம் தேதி கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் இடையே முதல் நேரடி விவாதம் நடைபெற்றது. அப்போது ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கினா். கருக்கலைப்பு சட்டம், சட்டவிரோத குடியேற்றம் போன்றவை தொடா்பாக விவாதங்கள் நடந்தன. இந்த நேரடி விவாதத்திற்கு பிறகு கமலா ஹாரிஸுக்கு ஆதரவு மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் சில மாகாணங்கில் டிரம்பிற்கு ஆதரவு பெருகி உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சுமார் 2 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அமெரிக்க தோ்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் அழிக்கப்படும் என பரபரப்பான கருத்துக்களை முன்வைத்து இருக்கிறார். மேலும் அண்மையில் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்று இருந்தது. அரசியல் லாபத்திற்காக டிரம்ப் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. துணை அதிபர் கமலா ஹாரிஸ், தனது கட்சி தொண்டர்களுக்கு முக்கிய உத்தரவு கொடுத்திருக்கிறார். அதாவது அமெரிக்க அதிபர் தேர்தலை மட்டும் நினைவில் வைக்காமல், தேர்தல் பணிகளை துரிதமாக நடத்தும் கூறி உள்ளார்.
ஏற்கனவே அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்க ஈரான் உள்ளிட்ட நாடுகள் திட்டமிட்டு வருவதாக பிரபல நிறுவனங்கள் குற்றம்சாட்டி இருந்தது. இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் சதிவேலையில் ஈடுபடுவதற்கு ரஷ்யா ஏஐ முறையை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
அன்னிய நாட்டின் சதி திட்டம் அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்பட்டு வரும் நிலையில், ரஷ்யா, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் அதிபர் தேர்தலுக்கு வேட்டு வைக்க திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் தயாரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மூலம் கமலா ஹாரிஸை தோற்கடிக்க சதி நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்க அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.