Home crime news கடந்த இரு மாதங்களில் 83 பேர் கொலையா-சற்று முன் வெளியான பேரதிர்ச்சி தகவல்..!

கடந்த இரு மாதங்களில் 83 பேர் கொலையா-சற்று முன் வெளியான பேரதிர்ச்சி தகவல்..!

இலங்கையில் இவ்வருடத்தின் இரு மாத காலப்பகுதிக்குள் 83 கொலை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (26)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையில் இவ்வருடம்  இரு மாத காலப் பகுதிக்குள் 83 கொலை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்,

1,180 திருட்டு சம்பவங்களும் 310 கொள்ளைச் சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் இரு மாத காலப்பகுதிக்குள் 20 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் பதிவாகின.

அவற்றில் 10 துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் பாதாள உலக குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version