Tag: தகவல்

HomeTagsதகவல்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: குறைவடையப்போகும் வற் வரி!

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள 18 சதவீத வற் வரியை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 3 வீதத்தால் குறைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலத்தில் 12 சதவீதமாக இருந்த வற் வரி, சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரையின்படி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. title=”VAT YBM” src=”https://veeramurasu.com/wp-content/uploads/2024/03/VAT-YBM.jpg” alt=”VAT YBM” width=”800″ height=”600″ class=”alignnone size-full wp-image-89294″ /> மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் எதிர்காலத்தில் வற் வரியை 15 சதவீதமாக பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக […]

கனடாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் – வெளியான புதிய தகவல்!

கனடாவின் ஒட்டாவா நகரில் இலங்கையை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிர் தப்பிய கணவர் தனுஷ்க விக்கிரமசிங்க தற்போது குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் இந்த பயங்கர சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து வெளியே வர பல ஆண்டுகள் ஆகும் என கனேடிய பௌத்த பேரவையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கு இன்று(17ம் திகதி) பிற்பகல் ஒட்டாவாவில் நடைபெறும் என்றும், அஞ்சலி செலுத்த வருபவர்கள் தங்கள் இரங்கல் குறிப்புகளை எழுதி வைக்க […]

அஸ்வெசும நலன்புரித் திட்டம் இரண்டாம் கட்டம் – விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு விண்ணப்பிக்கும் காலவகாசம் எதிர்வரும் 22 ஆம் திகதி (சனிக்கிழமை) வரை நீடிக்கப்பட்டுள்ளது.இரண்டாம் கட்டத்துக்காக இதுவரையில் 130,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் முதலாம் கட்ட பெயர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து கிடைக்கப்பெற்ற 1,227000 முறைப்பாடுகள் மற்றும் மேன்முறையீட்டில் 212,000 முறைப்பாடு மற்றும் மேன்முறையீடுகள் ஒரு தரப்பினரால் தொடர்ந்து தாக்கல் […]

டக்ளஸ் வெளியிட்ட முக்கிய தகவல்.

வடபகுதியின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பல மில்லியன் நிதியை வழங்க சீனா, இந்தியா, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தை சரியானதாக பயன்படுத்திக்கொள்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறுகையில் – பாரிய பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்திருந்தாலும் தற்போதுள்ள அரசின் சரியான அரசியல் வழிநடத்தல் காரணமாக அந்த நிலையிலிருந்து நாடு தற்போது மீண்டு வருகின்ற நிலையில் […]

புதிய அமைப்பை உருவாக்கும் டக்ளஸ் – வெளியான அதிர்ச்சித் தகவல்

வடக்கின் கடல் பாதுகாப்பை கண்காணிப்பதற்காக “கடல் சாரணர்கள்” என்ற தொண்டர் அமைப்பை உருவாக்க அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ்விடயத் தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில் – வடபகுதி கடற்பரப்பில் இந்திய மீன்பிடியாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினர் முடியுமானவரை தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் எமது கடல் வளங்களும் எமது கடற்றொழிலாளர்களது கடற்றொழில் உபகரணங்களும் சட்டவிரோதமாக எமது கடற்பரப்புகளுக்குள் உள் நுழையும் இந்திய மீன்படியாளர்களால் அழிக்கப்பட்டுவரும் நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் கடற்பரப்பின் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்றுமொரு முயற்சியாக குறித்த யோசனையை நான் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளேன். அதாவது கடல் பகுதிகளை கண்காணிப்பு செய்வதற்காக கடல் சாரணர் அமைப்பு என்ற ஒரு தன்னார்வ அமைப்பை உருவாக்கி அவர்களையும் குறித்த இந்திய மீன்பிடியாளர்களின் செயற்பாடுகளை கண்காணித்து கடற்படையினரது உதவியுடன் கட்டுப்படுத்த முடியும் என கருதுகின்றேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொள்ளை லாபம் பார்க்கும் பால்மா நிறுவனங்கள்-வெளியான அதிர்ச்சி தகவல்..!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலையை நிர்ணயம் செய்ய தயாரிக்கப்பட்ட விலை சூத்திரம் 2019 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தினால், இறக்குமதி நிறுவனங்கள் அதிக இலாபத்தில் பால் மாவை விற்பனை செய்து வருவதாக அரசாங்க நிதிக் குழுவில் தெரியவந்துள்ளது. குறித்த குழுவின் முன்னிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அழைக்கப்பட்ட போது இது தொடர்பில் தெரியவந்துள்ளது

இந்த வருட தொடக்கம் முதல் இன்று வரை 112 சிறுமிகள் கர்ப்பம்-வெளியான அதிர்ச்சி தகவல்..!

நாட்டில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துவரும் நிலையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16 வயதுக்குட்பட்ட 112 சிறுமிகள் கருத்தரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , கடந்த 2022 ஆம் ஆண்டில் 1,232 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டில் 1,497 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் 168 சிறுமிகள் […]

அரச உத்தியோகத்தர்கள் இடமாற்றம் தொடர்பில் வெளியான தகவல்..!

மாகாண அரச சேவையில் நிரந்தர நியமனம் பெற்ற உத்தியோகத்தர் ஒருவரை மத்திய அரசாங்கத்தில் உரிய பதவிக்கு இடமாற்றம் செய்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு அரச சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பொதுச்சேவை ஆணைக்குழு அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாண பொதுச் சேவையில் நிரந்தர நியமனம் பெற்ற அதிகாரி ஒருவரின் கோரிக்கையை மத்திய அரசில் உரிய பதவிக்கு மாற்றலாம் என்று 2020 ஆம் ஆண்டு […]

சிறுவர்கள் துஸ்பிரயோகம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் பதிவுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்திருந்தார். நாட்டில் அண்மைக்காலங்களில் பதிவான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் நெருங்கிய உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 2022 ஆம் ஆண்டில் 1,618 முறைப்பாடுகளும், 2023 ஆம் ஆண்டில் 1,639 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, உரிய தெளிவுப்படுத்தல்கள் மூலம் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க முடியும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு […]

சமுர்த்தி திட்டம் தொடர்பில் சற்று முன் வெளியான மகிழ்ச்சி தகவல்..!

சமுர்த்தி திட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரத்து செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். மேலும், சமுர்த்தி திட்டத்தை மேம்படுத்துவதற்கு விசேட பொறுப்பை எதிர்காலத்திலும் முன்னெடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டினார். மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போதுள்ள முறையில் நலன்புரி நன்மைகள் சபைக்கு இந்த கட்டாயப் பங்களிப்பை வழங்க வேண்டிய பணத்தின் வகையை குறைத்து, […]

மின்சார சபையின் மற்றுமொரு மகிழ்ச்சி தகவல்..!

மின் இணைப்பை மீளப் பெறுவதற்கான கட்டணத்தை 3000 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க நேற்று (05) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மின் இணைப்பு மீளமைக்கப்படும் போது வாடிக்கையாளர்கள் செலுத்த முடியாத தொகையை தவணை முறையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மின் கட்டணம் குறைக்கப்பட்டதால் தற்போது 30 அலகு பயன்படுத்தும் வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய தொகை 540 […]

பாடசாலைகளில் அரசியல்-சற்று முன் வெளியான தகவல்..!

பாடசாலைகள் மற்றும் பாடசாலை வளாகங்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் அதிகாரத்தை மாகாண ஆளுநர்களுக்கு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நேற்று அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பாடசாலை மற்றும் பாடசாலை வளாகங்களில் அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதாக பல்வேறு தரப்பிடமிருந்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றினை கருத்திற்கொண்டு, அந்த பகுதிகளில் கூட்டங்கள் உள்ளிட்ட அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதனை தடை […]

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...