களுகங்கையில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்..!

களுகங்கையில் இருந்து இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளதாக தெற்கு களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பெண் களுத்துறை நகரை அண்மித்த பகுதிகளில் பல சந்தர்ப்பங்களில் வசித்து வந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணுக்கு சுமார் 50 வயது இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.