கள்ள காதல் விவகாரம்!! கள்ள காதலியை கொன்றுவிட்டு போலீசிற்கு போன் செய்த காதலன்

கள்ளக்காதலில் ஏற்பட்ட பிரச்சினையினால் 37 வயதான இரு பிள்ளைகளின் தாய் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை, சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெத்தேவ, மேற்கு பொல்பஹ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (05) மாலை இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த, 38 வயதான சுரங்கிகா நதிஷானீ எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் நேற்று பி.ப. 4.30 மணியளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், அப்போது வீட்டுக்குள் நுழைந்து அதே பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த பெண்ணுடன் உறவில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படும் நபரே இந்தக் கொலையைச் செய்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையைச் செய்த சந்தேகநபர் சூரியவெவ பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து குறித்த பெண்ணை கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட கள்ளக்காதல் இருந்து வந்துள்ளதோடு, இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இருவருக்குமிடையிலான முரண்பாடே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் நேற்றையதினம் (05) இரவு 11.00 மணியளவில் அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து, ஹம்பாந்தோட்டை நீதவானும் மேலதிக மாவட்ட நீதவானுமான ஓஷத மிகார மஹஆரச்சி சம்பவ இடத்திற்குச் வந்து பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் சடலத்தை அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணரிடம் ஒப்படைத்து, பிரேத பரிசோதனையை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சூரியவெவ பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் இனங்காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொளள்ளப்பட்டு வருகின்றது.

சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கள்ள காதல் விவகாரம்!! கள்ள காதலியை கொன்றுவிட்டு போலீசிற்கு போன் செய்த காதலன்-oneindia news கள்ள காதல் விவகாரம்!! கள்ள காதலியை கொன்றுவிட்டு போலீசிற்கு போன் செய்த காதலன்-oneindia news கள்ள காதல் விவகாரம்!! கள்ள காதலியை கொன்றுவிட்டு போலீசிற்கு போன் செய்த காதலன்-oneindia news கள்ள காதல் விவகாரம்!! கள்ள காதலியை கொன்றுவிட்டு போலீசிற்கு போன் செய்த காதலன்-oneindia news கள்ள காதல் விவகாரம்!! கள்ள காதலியை கொன்றுவிட்டு போலீசிற்கு போன் செய்த காதலன்-oneindia news கள்ள காதல் விவகாரம்!! கள்ள காதலியை கொன்றுவிட்டு போலீசிற்கு போன் செய்த காதலன்-oneindia news