Home ᴋɪʟɪɴᴏᴄʜᴄʜɪ ɴᴇᴡꜱ குடும்ப மீளாய்வுக்காக சென்றிருந்த மதகுரு மீது தாக்குதல்

குடும்ப மீளாய்வுக்காக சென்றிருந்த மதகுரு மீது தாக்குதல்

313
0

கிளிநொச்சி – கனகாம்பி கைகுளம் கிராம அலுவலரிடம் குடும்ப மீளாய்வுக்காக சென்றிருந்த மதகுரு மீது நேற்று தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மதகுரு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அருட் கலாநிதி றமேஸ் அமதி அடிகளார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் சம்பவம் தொடர்பாக கூறுகையில்,

மதகுருக்கள் பலவாறு அவமதிக்கப்படுவதையும், தாக்கப்படுவதையும் சமகாலத்தில் நாம் காண்கிறோம். உயர் கலாசார மற்றும் பாரம்பரிய ஒழுக்க விழுமியங்கள் கட்டிக்காக்கப்படும் கிளிநொச்சி மண்ணில் நடந்த இந்த அநாகரிக செயலுக்கு கிளிநொச்சி சர்வ மத தலைவர்கள் சார்பில் கவலை தெரிவிக்கிறேன்.

இத்தகைய செயற்பாடுகள் இனியும் இடம்பெறா வண்ணம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here