கோழி இறைச்சி பொதிக்குள் மனைவி செய்த காரியம்..!

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை இரகசியமாக கொண்டு வந்த மனைவி ஒருவர் நேற்றைய தினம் (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவனுக்கு கொடுப்பதற்காக கோழி இறைச்சி பொதி ஒன்று கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் அதனை சோதனை செய்த போது அதனுள் ஹெரோயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை  தெரியவந்துள்ளது.

அதனை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகளினால் குறித்த பெண், களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பயாகல முலட்டியன பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான பெண் தனது 6 வயது மகளுடன் அங்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 550 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.