Home LOCAL NEWS சஞ்சீவ கொலை – பிரதான சந்தேகநபர் கைது

சஞ்சீவ கொலை – பிரதான சந்தேகநபர் கைது

596
0

கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான கொலையாளி நீதிமன்றத்தில் உள் நுழைய பயன்படுத்தப்பட்ட சட்டத்தரணி அடையாள அட்டை,தப்பிக்க பயன்படுத்ப்பட்ட வாகனம் ஆகியவற்றோடு  புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் ஏற்கனவே 5 கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரப்படையின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், இராணுவ கமாண்டோ படையணியின் முன்னாள் சிப்பாய் என தெரியவந்துள்ளது..

சஞ்சீவ கொலை - பிரதான சந்தேகநபர் கைது-tamilwin.cam-Uncategorized சஞ்சீவ கொலை - பிரதான சந்தேகநபர் கைது-tamilwin.cam-Uncategorized

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here