சற்று முன் அரச பேரூந்தை நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்..!{படங்கள்}

பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியாா் பேருந்து உாிமையாளா்கள் இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

முறையான பேருந்து தாிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூா் மற்றும் நீண்டதுார தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துனா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா்.

இதனால் தனியாா் போக்குவரத்து சேவைகள் மாகாண மட்டத்தில் முடங்கியுள்ளது. இந்நிலையில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தனியாா் பேருந்து சாரதிகள், நடத்துனா்கள் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனா்.

இந்நிலையில் இ.போ.ச பேருந்துகளும் சேவையில் ஈடுபட முடியாதளவு நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அசௌகாியங்களை சந்தித்துள்ளனா்.

பொலிஸாா் தலையிட்டு சில இ.போ.ச பேருந்துகளை முற்றுகையிலிருந்து விடுவிக்கும்போதும் சுமுகமான சேவை இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதன் தனியாா் பேருந்து உாிமையாளா்களின் கோாிக்கை தொடா்பாக பேசுவதற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலரை

ஆளுநா் மற்றும் அரச அதிபரை சந்திக்க அழைத்துச் சென்றுள்ளாா்.

சற்று முன் அரச பேரூந்தை நிலையத்தை  முற்றுகையிட்டு போராட்டம்..!{படங்கள்}-oneindia newsசற்று முன் அரச பேரூந்தை நிலையத்தை  முற்றுகையிட்டு போராட்டம்..!{படங்கள்}-oneindia newsசற்று முன் அரச பேரூந்தை நிலையத்தை  முற்றுகையிட்டு போராட்டம்..!{படங்கள்}-oneindia newsசற்று முன் அரச பேரூந்தை நிலையத்தை  முற்றுகையிட்டு போராட்டம்..!{படங்கள்}-oneindia news