Home இலங்கை செய்திகள் சற்று முன் மலையகத்தில் மிதந்து வந்த மற்றுமொரு இளைஞனின் சடலம்..!

சற்று முன் மலையகத்தில் மிதந்து வந்த மற்றுமொரு இளைஞனின் சடலம்..!

தலவாக்கலை மேல் கொத்மலா நீர்த்தேக்கத்தில்  (29) மாலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

 தலவாக்கலை புகையிரதசாலையில் உள்ள இரண்டு பாலங்களுக்கும் நீர்த்தேக்கத்தின் குறுக்கே நெடுஞ்சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் மிதந்த இந்த சடலத்தின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா நீதவான் வந்து ஸ்தல பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version