சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 24] எபிசோடில் மீனா வீட்டில் கொலு வைக்க நினைக்கிறார்.. ஸ்ருதியை தூண்டி விடும் சுதா .
ஸ்ருதியின் அசைக்க முடியாத நம்பிக்கை ;
சீதா பூக்கடையில அவங்க அம்மாக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க அம்மாவும் உனக்கு வேலைக்கு டைம் ஆச்சு நீ கெளம்புன்னு சொல்றாங்க. இப்ப சத்தியா காலேஜுக்கு போறத பாத்துட்டு ரெண்டு பேருமே சந்தோஷப்படுறாங்க.. இந்த டைம்ல மீனாவும் வந்துடுறாங்க. இப்போ கோவில் பூசாரி மீனாவை கூப்பிட்டு மீனா இவங்க தான் ஜானகி அம்மா அப்படின்னு சொல்றாங்க. மீனாவும் எனக்கு தெரியுமே இவங்க வருஷ வருஷம் நம்ம கோவில்ல கொலு வைப்பாங்க அப்படின்னு சொல்றாங்க. உடனே பூசாரி சொல்றாரு பத்து நாளைக்கு தேவையான சுண்டலும் கொழுக்கட்டையும் செஞ்சு கொடுமான்னு கேட்க உடனே மீனாவோட அம்மா நான் செஞ்சு கொடுத்துடறேன் அப்படின்னு சொல்றாங்க.
இப்போ அந்த ஜானகி அம்மா மீனாவை பார்த்து நீ வீட்ல கொலு வைக்கலாம் இல்லம்மா வீட்ல கொலு வச்சா நல்லது நடக்கும். சீக்கிரமா குழந்தை பிறக்கும் அப்படின்னு சொல்றாங்க. மீனாவும் எனக்கும் வைக்கணும்னு ஆசை தாங்க அப்படின்னு சொல்றாங்க.. இப்போ ஸ்ருதியோட அம்மா ஸ்ருதியோட டப்பிங் ஸ்டுடியோக்கு வராங்க. ஸ்ருதி டப்பிங் பேசிட்டு இருக்காங்க.. டப்பிங்ளையும் சுருதி அம்மா என்ன பேச வந்தாங்களோ அதே சீன் ஓடிட்டு இருக்கு.. இப்போ அவங்க அம்மா வந்தது தெரிஞ்சு சுருதி வெளியில வராங்க ..சொல்லு மம்மி அப்படின்னு கேக்குறாங்க அதுக்கு சுதா சொல்றாங்க இன்னைக்கு ஷாப்பிங் போனபோ மாப்பிள்ளை பார்த்தேன். மாப்ள அவங்க ஓனரோட பொண்ணு கூட வந்திருந்தார். அந்த பொண்ணு சரியில்ல எனக்கும் இது சரியா படல நீ மாப்பிள்ளையே உன்னோட கண்ட்ரோல்ல வச்சுக்கோ அப்படின்னா அட்டெஸ்ட் பண்றாங்க.
வீட்டில் கொலு வைக்க சம்மதிக்கும் விஜயா ;
உடனே சுருதி நீயும் போர் அடிக்காத அம்மா ஸ்டுடியோவில இன்னைக்கு அதே சீனு தான் நீயும் போர் அடிக்காத அப்படின்னு சொல்றாங்க. எனக்கு ரவி மேல நம்பிக்கை இருக்கு அவன் அப்படிப்பட்டவன் இல்ல அவன் வேலை விஷயமா நாலு இடத்துக்கு போக தான் செய்வான் இதெல்லாம் நீ தப்புனு சொல்லுவியா இன்னொரு தடவை இந்த மாதிரி பேசணும்னா இந்த பக்கம் வந்திடாத அப்படின்னு சொல்லிட்டு கிளம்புறாங்க. இப்போ மீனா முத்து கிட்ட கொலு வைக்கணும்னு ஆசையா இருக்குதுன்னு சொல்றாங்க ..ஓகே பண்ணிடலாம் அப்படின்னு முத்து சொல்றாரு. இதுக்கு உங்க அம்மா என்ன சொல்லுவாங்கன்னு தெரியலையே.. இரு நம்ம அப்பா கிட்ட பேசலாம்னு அண்ணாமலையை தேடி ரெண்டு பேரு போறாங்க அண்ணாமலை கிட்ட சொல்லவும் அண்ணாமலை விஜயா கிட்ட பேசுறாரு.
விஜயா ஃபர்ஸ்ட் அதெல்லாம் நம்ம வீட்ல பழக்கம் இல்ல ..புதுசு புதுசா எதுவும் கொண்டு வராதீங்க எனக்கு இதெல்லாம் பிடிக்காது தினமும் பூஜை எல்லாம் பண்ணனும் பாட்டெல்லாம் பாடணும்னு விஜயா சொல்ல உடனே அண்ணாமலை நீ தான் நல்லா பாட்டு பாடுவியே அப்படின்னு சொல்றாரு. விஜயா அப்படியே ஷாக்கா பாக்குறாங்க.. அப்படியே மனசு இறங்கி சரின்னு ஒத்துக்கிறாங்க .. பார்வதி வீட்டுக்கு போற விஜயா வீட்ல கொலு வைக்கிற விஷயத்தை சொல்றாங்க பார்வதியும் நல்லது தானே.. ஆனா அந்த பூக்கற்றவை ஆசையெல்லாம் நிறைவேத்தணுமா.. அப்படின்னு விஜயா சொல்ல உடனே பார்வதி நல்ல விஷயத்தை யார் சொன்னா என்ன விஜயா எல்லா வேலையும் மீனாதான் இழுத்து போட்டு பாக்க போற உனக்கு என்ன பிரச்சனை இதுல அப்படின்னு கேக்குறாங்க இதோட இன்னைக்கு எபிசோடு முட்டுச்சுருக்காங்க ..