சிறப்பாக இடம்பெற்ற இயந்திரம் மூலம் நெல் நாற்று நடுகை தொடர்பான கருத்தரங்கு..!{படங்கள்}

முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கான இயந்திரம் மூலம் நெல் நாற்று நடுகை தொடர்பான கருத்தரங்கு நேற்று (06) ஒட்டுசுட்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது

லைக்கா ஞானம் பவுண்டேஷன் நிறுவனத்தின் நிதி அனுசரணையோடு முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி யாமினி சசீலன் அவர்களது ஒழுங்குபடுத்தலில் குறித்த இயந்திரம் மூலம் நெல் நாற்று நடுகை தொடர்பான கருத்தரங்கு ஒட்டுசுட்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது .

மாவட்ட விவசாய பயிற்சி நிலைய பண்ணை முகாமையாளர் லிங்கரட்ணம் துமிலன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற குறித்த கருத்தரங்கில் முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி யாமினி சசீலன் இந்திரா குழுமத்தின் பணிப்பாளர் ரஜிதரன் நெல் மற்றும் பயிர் பாதுகாப்பு பாடவிதான உத்தியோகத்தர் லக்ஸ்சுமிதரன் ஆகியோர் கருத்துரை மற்றும் செயல்முறை ரீதியான விளக்கங்களை விவசாயிகளுக்கு வழங்கினர்

நெற் செய்கை ஊடாக அதிக இலாபத்தை பெறக்கூடிய வகையிலே நவீன வசதிகளுடன் கூடிய இயந்திர முறை மூலமாக நாற்று நடுகை பாசூட் முறையிலான நெற் பயிர்ச்செய்கை மற்றும் பல விடயங்கள் தொடர்பாக இந்த கலந்துரையாடலின் போது பங்குபற்றியவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது

குறித்த கருத்தரங்கில் லைக்கா ஞானம் பவுண்டேஷன் நிறுவனத்தின் ஊழியர்கள் ,விவசாய போதனாசிரியர்கள் ,விவசாய உதவியாளர் கற்கைநெறி மாணவர்கள் ,விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
சிறப்பாக இடம்பெற்ற இயந்திரம் மூலம்  நெல் நாற்று  நடுகை தொடர்பான கருத்தரங்கு..!{படங்கள்}-oneindia news