Home JAFFNA NEWS சுண்ணக்கல் வாகன விவகாரம்.. வாகனம் மற்றும் கற்களை பிணைமுறியில் விடுவித்த நீதிமன்றம்.

சுண்ணக்கல் வாகன விவகாரம்.. வாகனம் மற்றும் கற்களை பிணைமுறியில் விடுவித்த நீதிமன்றம்.

188
0

வழி மறிக்கப்பட்ட சுண்ணக்கல் வாகன விவகாரம்.. கடிதங்கள் மூலம் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை சட்டமாக ஏற்கமுடியாது … சட்டத்தரணி கலாநிதி குருபரன் மன்றில் வாதம் வாகனம் மற்றும் கற்களை பிணைமுறியில் விடுவித்த நீதிமன்றம்.

சாவக்கச்சேரியில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் வழிமறிக்கப்பட்ட சுன்னக்கல் ஏற்றிய கனகர வாகனத்தை 5 இலட்சம் ரூபா பிணை முறியில் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் விடுவித்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது கடந்த வாரம் சாவ கச்சேரி பகுதியில் இரவு வேளை கனகர வாகனத்தில் சுண்ணக்கல் ஏற்றிச் செல்லப்படுவதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குறித்த வாகனத்தை வழிமறித்திருந்தார்.

அச்சமயம் வாகன சாரதிக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் குறித்த பொருளை எடுத்துச் செல்வதற்கான வழி அனுமதி தொடர்பான வாய்த் தர்க்கம் மேற்பட்ட நிலையில் பொலிசாரின் தலையீடு காரணமாக குறித்த வாகனம் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.

குறித்த விடயம் ஊடகங்களுக்கு அப்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குறித்த வாகனம் உரிய அனுமதிகள் பெறாது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த வாகனத்தை தான் மறித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இன் நிலையில் குறித்த வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபார நிறுவனத்தின் உரிமையாளர் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது சகல அனுமதிகளும் பெறப்பட்டு தான் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் வேண்டுமென்றே தமக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் நடந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இன் நிலையில் குறித்த வழக்கானது நேற்று முன்தினம் திங்கட்கிழமை சாவகச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வாகனத்தை எடுத்த செல்வதற்கு மன்று அனுமதி வழங்கி இருந்தது.

இன் நிலையில் நகத்தல் பத்திரம் மூலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாதகச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நிறுவனத்தின் சார்பில் கலாநிதி குமார வடிவேல் குருபரன் ஆஜராகி இருந்தார்.

சட்டத்தரணி கலாநிதி குருபரன் மன்றுக்கு பின்வரும் விடையங்களை சுட்டிக்காட்டினார்.

குறித்த வழக்கில் எனது கட்சிக்கார் அகழ்வு தொழிலை செய்பவர் அல்ல அனுமதி பெற்றவர்களிடம் பணம் கொடுத்து கற்களை வாகனங்களில் ஏற்றி போக்குவரத்து செய்கிறார்.

2009 ஆண்டு 28 (2) சட்டம் இன்னும் திருத்தப்படவில்லை 1993 தொடக்கம் 2023 ஒழுங்கு விதிகள் யார் அனுமதி பெற வேண்டும் என தெளிவாக கூறுகிறது.

அதனை விடுத்து அனுமதிகள் என கூறப்படும் விடையங்கள் எந்தச் சட்டத்தில் இருக்கிறது யாரிடம் பெற வேண்டுமென கூறினால் அதனையும் பெறத் தயாராக இருக்கிறோம்.

அதனை விடுத்து இலங்கை சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வராமல் அரச அதிகாரிகளினால் எழுதப்படும் கடிதங்கள் சட்டமாக கொள்ள முடியாது.

பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஊடகங்களுக்கு தெரிவித்த பகுதியில் எனது கட்சிக்காரர் கற்களைப் பெறவில்லை பலாலி பகுதியில் உரிய அனுமதி பெற்றவரிடம் கற்களை கொள்வனவு செய்தார் .

பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பொலிசாரின் அதிகாரங்களை கையில் எடுப்பது தொடர்பில் மன்றுக்கு சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அதற்கு தனியான முறைப்பாடு ஒன்று இருப்பதால் அது பற்றி பின்னர் முடிவெடுப்போம்.

பொலிசார் குழப்பகரமான சூழ்நிலை இருந்தபடியால் போலீஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர் குறித்த வழக்கில் சந்தேக நபர் பெயர் குறிப்பிடப்படாமை தொடர்பில் மன்றுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

அது மட்டுமல்லாது இரண்டு நீதிமன்றங்களில் சுண்ணக்கல் எடுத்துச் செல்வது தொடர்பில் நீதிமன்றங்கள் வழங்கிய கட்டளைகளை மன்றிக்கு சுட்டிக்காட்டப்பட்டது..

சமர்ப்பணங்களை ஆராய்ந்த மன்று ஐந்து லட்சம் ரூபாய் பெறுமதியான பிணை முறியில் வாகனத்தையும் கற்களையும் விடுவித்ததுடன் வாகனம் உரிய பரிசோதனை அறிக்கை பெறுமாறு கூறியதுடன் வழக்கை எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு தவணை இடப்பட்டது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here