டொலருக்கு எதிராக ரூபா உயர்வு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 308.49 ரூபாவாகவும், 318.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.