மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல் நகர் களப்புக் கடலோரத்தில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட சில உபகரணங்களை மூதூர் பொலிஸார் இன்று(17) காலை மீட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது கமரா -01, கமரா பெட்டரி -01, சீடி பிளேயர் -01, ட்ரோன் கமராவை இயக்கும் கொன்றோலர் -01 என்பன புதைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர் பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவ் உபகரணங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.