நேற்று மாலை திருகோணமலை கண்டி பிரதான வீதியின் கித்துள் ஊற்று பகுதியில் வேனும் ,டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் வானில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹபரணையிலிருந்து கிண்ணியா நோக்கிச் சென்ற வான், எதிர் திசையில் வந்த மணல் ஏற்றிச் செல்லும் பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த இருவர் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும், காயமடைந்த டிப்பர் சாரதி கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர்.அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.