தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து-இரு மதகுருமாருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி மியான்குளம் சந்தியில்  நேற்றையதினம்(26) மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மத குருமார்கள் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட பின்னர்  மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

வெலிக்கந்தைப் பகுதியில் இருந்து கிரான் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் வழியில்  மட்டக்களப்பில் இருந்து வெலிக்கந்தை நோக்கி எதிரே வந்த கனரக வாகனமும் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதன்போது,  கிரானைச் சேர்ந்த இரு மத குருமார்களே  இவ்வாறு விபத்திற்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

விபத்துடன் தொடர்புடைய, கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனம் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து-இரு மதகுருமாருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}-oneindia news தமிழர் பகுதியில் மற்றுமொரு கோர விபத்து-இரு மதகுருமாருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}-oneindia news