தவறான முடிவெடுத்து சிறைக்கைதி ஒருவர் சாவு!!

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து ஒருவர் சாவடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றயதினம் இரவு இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்

துஸ்பிரயோக குற்றம் ஒன்றிற்காக வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த குறித்த நபர் நேற்றயதினம் இரவு சிறைக்கூடத்திற்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் உணடியாக சிறைக்காவலர்களால் மீட்கப்பட்ட அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் அவர் முன்னமே சாவடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த 57 வயதான நபரே சாவடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்