தாய்-சகோதரி கண்முன்னே பிரிந்த 14 வயது மாணவியின் உயிர்..!

எல்பிட்டிய, எபித்தங்கொட கால்வாயில் நீராடச் சென்ற சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

 

இந்த சிறுமி தனது தாய் மற்றும் சகோதரியுடன் நேற்று (03) மாலை எபித்தங்கொட கால்வாயில் நீராடச் சென்றுள்ளார்.

 

இதன்போது அவர்கள் மூவரும் நீரில் மூழ்கியுள்ள நிலையில், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

அங்கு சிறுமி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கனேகொட, கெபத பகுதியில் வசிக்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்தார்.

 

அவரது தாயும் சகோதரியும் தற்போது ஆபத்தான நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.