திருக்கோணேஸ்வர ஆலய பிரச்சினை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு!

திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபை தொடர்பில் பாரிய முருகல் நிலைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் அதுதொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று ஆலய காரியாலயத்தில் இடம்பெற்றது.

திருக்கோணேஸ்வர ஆலயத்தின் நிருவாக சபை தெரிவு மற்றும் நிர்வாக சபையை ரத்துச் செய்வது தொடர்பில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் போடப்பட்ட வழக்கில் தங்களுக்கு எந்தவொரு கட்டாணைகளோ கட்டளைகளோ அறிவித்தல்களோ வழங்கப்படவில்லை என கோயில் நிர்வாகத்தின் தலைவர் சட்டத்தரணி திலகரட்ணம் துஷ்யந்தன் தெரிவித்தார். திருக்கோணேஸ்வர ஆலயத்தின் நிருவாகசபைக்கெதிரான வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (10)விளக்கமளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில் 2023ம் ஆண்டின் நிருவாக தெரிவில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகசபையை ரத்துச் செய்ய கோரி இரண்டு இடைபுகு மனுதாரர்கள் வழக்கு தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது ஆனால் எமக்கு இது தொடர்பான எந்தவொரு கட்டாணைகளோ கட்டளைகளோ அறிவித்தல்களோ மாவட்ட நீதிமன்றினால் வழங்கப்படவில்லை, இது இவ்வாறிருக்க கௌரவ மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உள்ளிட்ட குழுவினர் கடந்த 07.03.2024 அன்று மாலை 4.15 மணியளவில் திருக்கோணேஸ்வரர ஆலய அலுவலகம் அமைந்துள்ள ஆதனத்துள் அத்துமீறி பிரவேசித்து அதனை கையகபடுத்த முயற்சித்தனர்.

அலுவலகம் பூட்டியிருந்ததால் வழிபடும் நோக்கமின்றி திருக்கோணேஸ்வர ஆலயத்துள் மாலை 4.35 மணியளவில் பிரவேசித்து பிரதம குரு மற்றும் ஊழியர்களிடம் புதிய நிருவாகிகள் இவர்கள் தான் என கூறி அவர்கள் சொற்படி நடக்கவேண்டுமென அச்சுறுத்தியுள்ளனர். ஆலயத்துக்கு சொந்தமான பெறுமதிமிக்க பொருட்கள் பிரதமகுரு மற்றும் ஆலய பிரதமகுரு வசமுள்ளன. இவ்வாறு நிர்வாகிகள் தொடாபான ஆள்மாறாட்ட தகவல்களை வழங்கி விலையுயாந்த ஆலயத்துக்குச் சொந்தமான பொருட்களை குற்றமுறையாக கையாட முயற்சித்தமை இதன்மூலம் தெளிவாகிறது.

இது தொடர்பில் பொறுப்புள்ள நிர்வாகசபை தலைவர் என்ற அடிப்படையில் இந்த குழுவினர் அரச இயந்திரத்தை தவறாக வழிநடாத்த முயற்சிக்கும் செயல் இலங்கை அரசியலமைப்பு குடியியல் நடபடிக்கோவை என்பவற்றுக்கு எதிரான ஒரு சட்ட விரோத செயல் இது தொடர்பில் திருகோணமலை தலைமையகப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

திருக்கோணேஸ்வர ஆலய பிரச்சினை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு!-oneindia news