Home இலங்கை செய்திகள் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ள தகவல்..!

துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ள தகவல்..!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள  அழுத்தம் காரணமாக போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் குழுக்களுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் உருவாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவர்களுக்கிடையே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் கொலைகளும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (02) பிற்பகல் அனுராதபுரம் பகுதியில் சமய நிகழ்வென்றில் கலந்து கொண்ட பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு தொடர்பான புதிய வேலைத்திட்டம் மார்ச் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version