Home LOCAL NEWS தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது !

தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது !

202
0

பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தெஹியோவிட்ட – அட்டுலுகம, மீவலகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற அகழ்வு நடவடிக்கை தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 முதல் 56 வயதுக்கு இடைப்பட்ட சீதுவ மற்றும் தெஹியோவிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சோதனையிடப்பட்ட இடத்தில் பூஜை பொருட்கள் உள்ளிட்ட அகழ்வு நடவடிக்கைகளுக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here