பணத்திற்கு ஆசைப்பட்டு உயிர் தோழியை கொன்ற பெண்ணுக்கு இத்தனை ஆண்டு சிறையா-நீதிமன்று அதிரடி தீர்ப்பு..!

ஒன்பது மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஆசைப்பட்டு தமது உயிர்த் தோழியைக் கொலை செய்ய சதி செய்த பெண்ணுக்கு 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தக் கொலை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நிகழ்ந்தது. தம்மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டை 23 வயது டெனலி பிரேமர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இக்கொலை, ஜூன் 2, 2019இல் தண்டர்பர்ட் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள எக்லுட்னா ஆற்றின் கரையில் நடந்தது. அங்கு, 19 வயதான சிந்தியா ஹோஃப்மன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் ஆற்றில் வீசப்பட்டதாகவும் ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

பிரேமர், நியூ சாலிஸ்பரி, இந்தியானாவைச் சேர்ந்த டேரின் ஷில்மில்லர் என்பவரை சமூக ஊடகத்தின் மூலம் சந்தித்துள்ளார்.

ஆனால், டேரின் ஷில்மில்லர் தனது பெயர் “டைலர்” என்றும் அவர் கென்சசைச் சேர்ந்த கோடீஸ்வரர் என்றும் பிரெஹ்மரை நம்ப வைத்தார்.

பணத்திற்கு ஆசைப்பட்டு உயிர் தோழியை கொன்ற பெண்ணுக்கு இத்தனை ஆண்டு சிறையா-நீதிமன்று அதிரடி தீர்ப்பு..!-oneindia news

யாரையாவது கொலை செய்து அதைக் காணொளி எடுத்து தமக்கு அனுப்பினால் 9 மில்லியன் டொலர் தருவதாக பிரேமரிடம் அவர் தெரிவித்தார்.

பணத்துக்கு ஆசைப்பட்டு ஷில்மில்லர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தமது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து பிரேமர் இக்குற்றத்தைப் புரிந்தார்.

நீர்வீழ்ச்சிக்கு அருகில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் பிரேமர் பதிவாகியிருந்தன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியவர்கள் கண்டறியப்பட்டனர்.

அலாஸ்காவில் மரண தண்டவை விதிக்கப்படுவதில்லை என்பதால் 99 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, பிரேமரின் நண்பர் குழு சிந்தியா ஹோஃப்மன் தண்டர்பர்ட் நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளது.

அவர்கள் சிந்தியா ஹோஃப்மனை பாதை மாற்றி எக்லுட்னா நதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தலையின் பின்புறத்தில் சுடப்பட்டு ஆற்றில் வீசப்பட்டார் சிந்தியா ஹோஃப்மன்.