பீடி இலைகளுடன் இருவர் கைது..!{படங்கள்}

2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி கல்பிட்டி, பத்தலங்குண்டுவ கடற்பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் சுமார் 1471 கிலோகிராம் (ஈரமான எடை) எடையுள்ள பீடி இலைகளை டிங்கி படகு மூலம் கடத்த முற்பட்ட 02 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் 24 மணி நேரமும் விழிப்புடன் இருந்து சட்டவிரோதமான பொருட்கள் வருவதைத் தடுப்பதற்காக வழக்கமான தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

இந்த முயற்சிகளின் நீட்சியாக, வடமேற்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS விஜயா கடற்படை கப்பல்  இந்த விசேட நடவடிக்கையை பத்தலங்குண்டுவைக்கு அருகில் மேற்கொண்டது.

 இந்த நடவடிக்கையின் போது, ​​சந்தேகத்திற்கிடமான வகையில் கடற்கரையை நோக்கி வேகமாகச் சென்ற டிங்கி படகு ஒன்றை கடற்படையினர் இடைமறித்தபோது, ​​42 சாக்கு பீடி இலைகள் கடத்தி வரப்பட்டதைக் கண்டனர்.

அதன்படி, சுமார் 1471 கிலோகிராம் (ஈரமான எடை) எடையுள்ள பீடி இலைகள், டிங்கி படகு மற்றும்  02 சந்தேக நபர்களும் கடற்படைக் காவலில் வைக்கப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்கவிலுள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

பீடி இலைகளுடன் இருவர் கைது..!{படங்கள்}-oneindia news பீடி இலைகளுடன் இருவர் கைது..!{படங்கள்}-oneindia news பீடி இலைகளுடன் இருவர் கைது..!{படங்கள்}-oneindia news