மட்டக்களப்பில் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது !

மண் ஏற்றிவந்த லொறி சாரதியிடம் 2,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் வியாழக்கிழமை (25) கைது செய்யப்படதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனத்தை நிறுத்தி பரிசோதித்த விசேட பொலிஸ் பிரிவினருடன் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

கொழும்பிலிருந்து வருகை தந்த இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசேட அதிகாரிகளே அவ்விருவரையும் கையும் மெய்யுமாக கைது செய்தனர்.

கைதான சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.