மட்டு ஏறாவூர்; மீன்பிடி அதிகாரிகள் முற்றுகையிட்டு 22 அரை இலச்சம் ரூபா பெறுமதியான பெருமளவிலான சட்டவிரோத வலைகள் 3 தோணிகள் கைப்பற்றல்

மட்டு ஏறாவூர் கடற் கரைப்பகுதியில் மீன்பி அதிகாரிகள் கடற் படையினருடன்  இணைந்து தடை செய்யப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலைகளை தேடி  சோதனை நடவடிக்கை ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை மேற் கொண்டதில்  22 அரை இலச்சம் ரூபா பெறுமதியான பெரும் தொகை சட்டவிரேத சுருக்குவலைகள் 3 தோணிகளை கைப்பற்றியுள்ளதாக கடற்றொழில் நீரியல் நீரியல் வழங்க திணைக்க மீன்பிடி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் சிலர் தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்ட சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுவருவதாக மீனவர்கள்  முறைப்பாடு செய்து வந்தனர்.

இதனடிப்படையில் கடற்றொழில் நீரியல் நீரியல் வழங்க திணைக்கத்தின்  மீன்பிடி அதிகாரிகளான ஆர்.ஜீவானந்தன், ரி. பாலமுகுந்தன், ஆர்.ரஜீவ்கரன், வி. அமர்ராஜ் மற்றும் கடற்படையினர் இணைந்த குழுவினர் சம்பவதினமான இன்று காலையில்  ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீன்பிடியில் ஈடுபட்டுவரும் ஏறாவூர், குடியிருப்பு கடற்கரை பகுதியை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை மேற் கொண்டனர்.

இதன் போது அந்த பகுதி கடற்கரையில் மீன்பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 20 இலச்சம் ரூபா பெறுமதியான பெருமளவான சட்டவிரோ வலைகளையும் சட்டவிரோ வலையுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்து 2 அரை இலச்சம் ரூபா பெறுமதியான 3 தோணிகளையும் கைப்பற்றியதுடன் இதனை எவரும் உரிமை கோராத நிலையில் கைப்பற்றப்பட்ட வலைகள் தோணிகளை கல்லடியிலுள்ள மாவட்ட கடற்றொழில் நீரியல் நீரியல் வழங்கள் திணைக்களத்தின் காரியாலயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதில் கைப்பற்றப்பட்ட வலைகள் தோணிகளை நாளை திங்கட்கிழமை மட்டு நீதவான் நீதிமன்றில் ஓப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.

மட்டு ஏறாவூர்; மீன்பிடி அதிகாரிகள் முற்றுகையிட்டு 22 அரை இலச்சம் ரூபா பெறுமதியான பெருமளவிலான சட்டவிரோத வலைகள் 3 தோணிகள் கைப்பற்றல் - Dinamani news - மட்டு ஏறாவூர், மீன்பிடி அதிகாரிகள் மட்டு ஏறாவூர்; மீன்பிடி அதிகாரிகள் முற்றுகையிட்டு 22 அரை இலச்சம் ரூபா பெறுமதியான பெருமளவிலான சட்டவிரோத வலைகள் 3 தோணிகள் கைப்பற்றல் - Dinamani news - மட்டு ஏறாவூர், மீன்பிடி அதிகாரிகள்