மன்னார்   மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் -பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு..!{படங்கள்}

மன்னார் மாவட்டத்தின் இவ் வருடத்திற்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (16) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில்    மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான கே.கே.காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,ரிஷாட் பதியுதீன்,சாள்ஸ் நிர்மலநாதன்,கே.திலீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எனினும்  இணைத் தலைவர்களில் ஒருவரான வடமாகாண ஆளுநர் இறுதி நேரத்தில் குறித்த குழு கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதன் போது பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் ஒதுக்கீடுகள் குறித்து ஆராயப்பட்டதோடு பல்வேறு திட்டங்கள் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும் மன்னார் மாவட்ட ரீதியாக கலந்துரையாடப்பட வேண்டிய விடையங்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் காணி அபகரிப்பு,காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் குறித்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும்,இதற்கு மாவட்டத்தில் உள்ள உரிய திணைக்கள அதிகாரிகள் துணை போவதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

எனினும் இவ்விடயம் தொடர்பாக மக்களை பாதிக்கும் திட்டங்கள் குறித்து துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான கே.கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.

மேலும் வன வள மற்றும் வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் மக்களின் காணிகள் பிடித்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து ஆராயப்பட்டது.குறித்த கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள்,பொது அமைப்புக்கள்,படை உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மன்னார்   மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் -பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு..!{படங்கள்}-oneindia news மன்னார்   மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் -பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு..!{படங்கள்}-oneindia news மன்னார்   மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் -பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு..!{படங்கள்}-oneindia news மன்னார்   மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் -பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு..!{படங்கள்}-oneindia news