​மருமகள் மாமியாரிடம் சொல்ல வேண்டியதும்.. சொல்ல கூடாததும் இதுதான்..! இனிமே ஃபாலோ பண்ணுங்க!

காதல் திருமணமாக இருந்தாலும் பெற்றோர் பார்த்து வைத்த திருமணமாக இருந்தாலும் மாமியார் மருமகள் உறவு என்பது தண்ணீரும் எண்ணெயும் போல ஒட்டாமலே இருக்கும். அத்தி பூத்தாற்போன்று வெகு சிலர் மட்டுமே ஒற்றுமையாக இருப்பதை பார்க்கலாம்.

திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடன் புகுந்த வீட்டு உறவினர்களை அறிந்து கொள்வதும் பிறந்த வீட்டு உறவினர்களை அறிமுகப்படுத்துவதும் குடும்ப உறவினர்களை ஒன்றிணைக்க செய்யும். அந்த வகையில் மாமியார் மருமகள் உறவு எப்படி இருக்க வேண்டும்? மருமகள் மாமியாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்ன பேச வேண்டும் என்பதை பார்க்கலாம்.

முதல் முறை மாமியாரை பார்க்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

முதல் முறை மாமியாரை பார்க்கும் போது பளிச்சென்று இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் தோற்றம் நல்ல அபிப்ராயத்தின் பெரிய பகுதி. ஆடம்பரமாக இல்லை என்றாலும் சிறப்பான தோற்றம் அளிக்கும் ஆடையை அணிவதை உறுதி செய்யுங்கள். உங்கள் மாமியாருக்கு என்ன மாதிரியான அறிமுகம் பிடிக்கலாம் என்பதை உங்கள் துணையிடம் முன்கூட்டியே விவாதிக்கலாம்.

அவருக்கும் உங்களுக்கும் பிடித்த ஒரு விஷயம் உண்டு என்றால் நீங்கள் எளிதாக அவரை நெருங்கலாம். உதாரணத்துக்கு சமையலில் அவருக்கு விருப்பம் இருந்தால் இருவரும் இணைந்து இரவு நேர டின்னரை அசத்தலாக்க முடியும். இல்லையெனில் பொதுவான விஷயங்களை பற்றி ஒன்றிரண்டு வார்த்தைகள் தவிர வேறு எதையும் பேச முடியாது. அதனால் முதல் முறை அவரிடம் அறிமுகப்படுத்திகொள்ளும் போதே அவரது குணாதிசயங்கள் பற்றி அறிந்து அதற்கேற்ப உரையாடலை திட்டமிடலாம்.

மாமியாருக்கு சிறிய பரிசு அளிப்பது ஏன் அவசியம்?

முதல் முறை மாமியாரை பார்க்க செல்லும் போது இந்த பழகக்த்தை தொடங்கிவிடுங்கள். சிறிய இடைவெளி பிரிவுக்கு பிறகு அவரை பார்க்க தொடங்கும் போதெல்லாம். சிறு பரிசுடன் திட்டமிடுங்கள். அவருக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கலாம். இசை கேட்கும் வழக்கம் இருக்கலாம். அப்படி அவருக்கு பிடித்த ஒன்றை வாங்கி கொடுக்கும் பழக்கத்தை வையுங்கள்.

மாமியாரின் பிறந்தநாள், குடும்ப விழா, விசேஷநாட்கள் தொடங்கி தனிக்குடித்தனம் இருந்தாலும் வெளிநாட்டில் இருந்தாலும் அவர்களை பார்க்கும் போதெல்லாம் இந்த பரிசு கொடுப்பதை தொடருங்கள்.

கணவரின் குழந்தைப்பருவ கதைகள் கேட்பது அவசியம்

மாமியார் என்றாலே தன் பிள்ளையை பறித்து கொள்ள வந்த மற்றொருவர் என்ற பார்வை தான் இருக்கும். அதை மாற்ற உங்கள் பிள்ளையின் குழந்தைப்பருவ குறும்புகள் என்று தொடங்கினால் அவர்கள் குதூகலமாக பல விஷயங்களை பேசலாம். அவற்றில் பல உங்கள் துணையின் நினைவில் கூட இருக்காது. அதே போன்று மாமியாரின் குழந்தைப்பருவம் பற்றியும் சில வார்த்தைகள் பேசலாம்.

அது குடும்ப நினைவாக இருந்தால்லும் வித்தியாசமானதாக இருந்தால் நீங்கள் கேட்கும் போது அவர்கள் குதூகலமாக பதில் சொல்ல தொடங்குவார்கள். அவர்கள் கூறும் எதையும் அசுவாரசியமாய் கேட்காமல் சுவாரசியமாய் கேட்கும் பாவத்தை வைத்துகொள்ளுங்கள். அவரது பேச்சுக்கும் செயலுக்கும் நீங்கள் காட்டும் அக்கறை அவர்களை மேலும் உங்களிடம் நெருக்கமாக வைத்திருக்க உதவும்.

மாமியாருக்கு பிடித்த விஷயங்களை தெரிந்துகொள்ளலாமா?

மாமியாருக்கு பிடித்த உணவுகள், பிடித்த விஷயங்கள், பிடித்த வேலை என நேரம் இருக்கும் போது கேட்டு தெரிந்து கொள்வது வழக்கத்தை இருவருக்குமான நெருக்கத்தை அதிகரிக்கும். ஓய்வாக இருக்கும் போது மாமியாருக்கு பிடித்த உணவை செய்து கொடுங்கள். தெரியாத உணவே என்றாலும் அவரிடம் கேட்டு செய்வதோ அல்லது அவரை செய்ய சொல்லி அருகில் நின்று கற்றுக்கொள்வதோ அவருக்கு உங்கள் மீதான நெருக்கத்தை அதிகரிக்கும். அவருக்காக நீங்கள் யோசிக்கிறீர்கள் என்னும் உணர்வு வந்தாலே அவர் உங்களை எப்போதும் விட்டுக்கொடுக்காமல் இருப்பார்.

குடும்ப உறவினர்கள் பற்றி மாமியாரிடம் பேசலாமா?

கணவர் பற்றியும் மாமியார் பற்றியும் கேட்டு தெரிந்துகொள்வது போன்று நெருக்கமான மற்ற உறவினர்கள் பற்றியும் கெட்டு தெரிந்துகொள்ளலாம். அவர்களுடன் பிறந்த உடன்பிறப்புகள், மற்ற பிள்ளைகள் அவர்களுக்கு பிடித்த விஷயங்கள், அவர்களுக்கு நெருக்கமான உறவினர்கள் அவர்களது குணாதிசயங்கள் என எல்லாமே கேட்டு தெரிந்துகொள்ளலாம். இது குடும்ப உறவினர்களை புரிந்து கொள்ளவும், அனைவரது குணாதிசியங்களை புரிந்து அதற்கேற்ப நடக்கவும் உதவும். மேலும் குடும்ப ஒற்றுமையை பாதுகாக்க தனக்கு பிறகு மருமகள் வந்துவிட்டதாக மகிழ்ச்சியடைவார்.

மாமியாருடன் ஷாப்பிங் செய்யலாமா?

மாமியாருடன் ஷாப்பிங் செய்வது நன்றாகவா இருக்கும் என்று பலரும் கேட்கலாம். உண்மையில் அவருக்கும் ஷாப்பிங் செய்வதில் பிடித்தம் இருந்தால் உங்களுக்கு சிறந்த துணை கிடைத்தாற்போன்று இருக்கும். குடும்ப விழா ஒவ்வொன்றுக்கும் வேண்டிய பொருளை ஒவ்வொருவருக்கும் என பார்த்து பார்த்து வாங்கும் போது புகுந்த வீட்டின் மீது ஒரு பற்று உங்களுக்கும் இருக்கும். அதோடு ஷாப்பிங் செய்வது இருவருக்குமே நல்ல அந்நியோன்யத்தை அளிக்கும். மாமியார் மற்றும் மருமகள் உறவில் நல்ல தோழமை அதிகரிக்கும்.

புகுந்த வீடு பழக்கவழக்கங்கள் கற்றுகொள்வதன் நன்மைகள்

மாமியார் மருமகள் இடையே விரிசல் ஏற்படுத்தக்கூடிய விஷயங்களில் இதுவும் ஒன்று. குடும்ப பழக்கவழக்கங்களை மருமகள் கற்றுகொள்ள வேண்டும் என்பது தான் மாமியார்களின் எண்ணம் ஆக இருக்கும். அதற்கு முன்னதாக நீங்களே மாமியாரிடம் அவர்களது குடும்ப வழக்கம் என்ன, என்ன மாதிரியான பாரம்பரிய விஷயங்களை கடைபிடிக்கிறார்கள். அவர்களது சடங்குகள் மற்றும் மரபுகள் போன்றவற்றை கேட்டு தெரிந்துகொள்வதுடன் அதை பின்பற்றவும் செய்ய வேண்டும். இதனால் குடும்ப பொறுப்பை ஏற்கும் பக்குவத்துக்கு தயாராக மாறிவிடுவீர்கள். மாமியாரிடம் நல்ல பெயர் கிடைக்கும் என்பதோடு புகுந்த வீட்டிலும் பொருந்திகொள்வீர்கள்.

மாமியாரிடம் பேச வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

குடும்ப உறுப்பினர்களின் தேவைகள் என்ன நீங்கள் என்ன செய்யமுடியும் என்பது குறித்து பேசலாம்.
மாமியார் வெளி நடப்புகள், சமூக விஷயங்கள் குறித்து ஆர்வம் மிக்கவராக இருந்தால் அது குறித்து பேசலாம்.
கணவனிடம் நெருக்கம் காட்டுவது போன்று குடும்பத்துடன் நேரம் செலவிட ஒரு நாள் சுற்றுலா என குடும்பத்துடன் திட்டமிடுவது குறித்து பேசுவது குடும்பத்தின் மீதான பிணைப்பை அதிகரிக்க செய்யும்.
சினிமா, ஆன்மிகம், விளையாட்டு குறித்து இருவருக்கும் ஆர்வம் இருந்தால் அது குறித்து பேசுவது தோழமையை ஏற்படுத்தும்.
பிடிக்காத ஒரு உணவை அவர்கள் செய்தாலும் அன்றைய நிலையில் தவிர்க்காமல் பக்குவமாக சொல்லி உங்களுக்கு பிடித்த ஒன்றை செய்ய வைக்கலாம்.

மாமியாரிடம் பேசக்கூடாதது என்ன?

புகுந்த வீட்டுக்கு சென்ற உடன் அங்கிருப்பவர்களை பற்றிய செயல்பாடுகள் குறைபாடுகளாக சொல்ல கூடாது.
அவர்கள் வழக்கமாக செய்யும் செயல்பாடு நம்பிக்கையான ஒன்றாக இருக்கும் போது அதுபற்றி குறைத்து பேசக்கூடாது.
அவர்கள் சடங்குகளை அலட்சியப்படுத்தி பேச கூடாது
புகுந்த வீட்டை காட்டிலும் பிறந்த வீட்டில் இது சரியாக இருக்கும் என்றோ இருந்தது என்றோ எதையும் குறிப்பிட்டு பேசகூடாது.
வீட்டின் பொருளாதாரம் பற்றியோ உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்தும் வகையில் வாக்குவாதம் செய்ய கூடாது.
காதல் திருமணமோ, பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமோ என்னவாக இருந்தாலும் மாமியார் மருமகள் உறவு சுமூகமாக இருக்க இந்த குறிப்புகள் உதவும்.