மற்றுமொரு பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பலி..!

தம்புள்ளை – இப்பன்கட்டுவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

நேற்று (23) பிற்பகல் இப்பன்கட்டுவ நீர்த்தேக்கத்தில் பாதுகாப்பற்ற இடத்தில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், தம்புள்ளை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதலின் போதே குறித்த மாணவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் தனது பாட்டி மற்றும் சகோதரருடன் அனுராதபுரத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

காலி – ஹல்வித்திகல பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.