மலையகத்திலும் கோர விபத்து-நடு வீதியில் குத்துகரணம் போட்ட லொறி..!

நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி சென்ற லொறி ஒன்று  வெள்ளிக்கிழமை (16)  விபத்துக்குள்ளாகியது.

நுவரெலியா – கண்டி  பிரதான வீதியில் கொண்டக்கலை பகுதியில் வைத்து லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததாக நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியாவில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலையால் சாரதியின் கட்டுப்பாட்டைமீறி வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது

குறித்த லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்தனர் என்றும், எனினும் சிறு காயங்களுடன் பாதுகாப்பாக உயிர் தப்பியுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இடத்தில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.