மலையகத்தில் காணாமல் போன இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
மலையகத்தில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் நேற்று இரவு இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்கு கிடைக்க பெற்ற தொலைபேசி தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு பொலிசார் சென்று உள்ளனர்.
அங்கு சென்று பார்த்த போது அதே தோட்டத்தைச் சேர்ந்த 40 வயது உடைய இரண்டு குழந்தைகளின் தந்தையான குமாரவேல் சுப்பிரமணியம் என அடையாளம் காணபட்டு உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் இவ்வாறு இறந்த நிலையில் காணபட்ட நபர் கடந்த ஜந்து நாட்களுக்கு முன் காணாமல் போய் உள்ளார் என அவரது மனைவி புவணா மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார் என பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இறந்த நிலையில் காணப்படும் சடலம் பகுதியில் பொலிசார் மஸ்கெலியா பொலிசார் காவல் புரிந்து வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் நேரில் வந்து பார்வை இட்ட பின்னர் சடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.