மலையகத்தில் கோர விபத்து-இருவருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}

கம்பளை – கண்டி பிரதான வீதியில் கெலிஒயா பகுதியில் பஸ்ஸும் வானும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது,

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பேராதெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிஒயா பெற்றோல் நிரப்பு நிலையத்திதுக்கு முன்பாகவுள்ள வளைவில் இன்று இந்த விபத்து ஏற்பட்டுள்ளது,

மலையகத்தில் கோர விபத்து-இருவருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}-oneindia news

அனுராபுரத்தில் இருந்து ஹட்டன் – சிரிபாதமலைக்கு யாத்திரிகர்களை ஏற்றி வந்த பஸ்ஸும், புஸல்லாவைப் பகுதியில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த வானுமே நேருக்கு நேர் மோதியுள்ளது.

வானின் சாரதி நித்திரைக் கலக்கத்தில் இருந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பஸ்ஸில் பெரியவர்களுடன் சிறு பிள்ளைகளும் பயணித்துள்ளனர். எனினும், அதில் பயணித்த அனைவரும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.

பஸ்ஸில் பயணித்த ஒருவருக்கும், வானில் பயணித்த ஒருவருக்கும் மட்டும் சிறு காயங்கள் ஏற்ப்பட்டுள்ளன.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பேராதெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மலையகத்தில் கோர விபத்து-இருவருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}-oneindia news மலையகத்தில் கோர விபத்து-இருவருக்கு நேர்ந்த கதி..!{படங்கள்}-oneindia news