மஸ்கெலியாவில் போதைப்பொருள் நிகழ்வு

சிறிலங்காவின் சுதந்திரதினமான நேற்று, போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று நேற்று மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியாவில் போதைப்பொருள் நிகழ்வு-oneindia news

மஸ்கெலியா வலய பொலிஸ் பிரிவில் உள்ள ஏ.ஸ்.பி.ஜயசிங்க தலைமையில், மஸ்கெலியா நகரில் உள்ள பி.எம்.டி.கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்த
நிகழ்வில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஷ்பகுமார , பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் , பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள், நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.
மஸ்கெலியாவில் போதைப்பொருள் நிகழ்வு-oneindia news

நிகழ்வில் உரையாற்றிய எஸ்.எஸ்.பி.ஜயசிங்க
“ மிகவும் அமைதியான சூழலில் உள்ள மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் எந்த ஒரு அசம்பாவிதம் நடக்காமல் நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
அத்துடன் எமது பகுதியில் உள்ள 21 தமிழ் மற்றும் சிங்களப் பாடசாலைகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் போதை மாத்திரை , வாசனைப்பாக்கு ,புகையிலை மது என்பவற்றை முற்றிலும் தடுக்க வேண்டும் . ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் முன் வந்து எமது பகுதியில் உள்ள அனைத்து பாடசாலைக்கும் அருகில் போதைப் பொருள் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் அங்காடிகள் பற்றிய தகவல்கள் எமக்கு வழங்க வேண்டும்” என்று மக்களைக் கேட்டுக்கொண்டார்.