மின்னல் தாக்கி காற்பந்து வீரர் பலி.!

இந்தோனேசியாவில் சனிக்கிழமை (10) நடந்த கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கி கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுபாங்கைச் சேர்ந்த 34 வயதான நபரொருவர் மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில், எஃப்சி பாண்டுங் மற்றும் எஃப்பிஐ சுபாங் இடையே நடந்த போட்டியில் போட்டியிட்டுள்ளார்.

அப்போது திடீரென மைதானத்தின் நடுவில் நின்ற அவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.