முல்லைத்தீவில் தந்தையால் 11வயது மகள் துஸ்பிரயோகம்..!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த 34 வயதான தந்தை ஒருவர் தனது 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ள நிலையில் நேற்று இரவு முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூலித்தொழிலாளியான குறித்த தந்தை கடந்த மூன்று வருடங்களாக தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தந்தையின் கொடூர செயலை தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தாயார் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து நேற்று (06.03.2024) இரவு குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை முல்லைத்தீவு மாவட்ட வைத்திசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.