மூன்று மாதங்களின் பின் நித்தியவெட்டை வைத்தியசாலைக்கு புதிய வைத்தியர்-வரவேற்கும் மக்கள்..!

கடந்த மூன்று மாதங்களாக வைத்தியர் அற்று செயற்பாடற்றுக் காணப்பட்ட வடமராட்சி கிழக்கு நித்தியவெட்டை வைத்தியசாலைக்கு புதிய வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெற்றிலைக்கேணி,கட்டைக்காடு,நித்தியவெட்டை,போக்கறுப்பு ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்கள் குறித்த வைத்தியசாலையை நம்பியே இதுவரை வாழ்ந்து வந்தனர்.
பணியாற்றிய வைத்தியர் திடீர் இடமாற்றம் பெற்றுச் சென்றதால் மூன்று மாதங்களாக நித்தியவெட்டை வைத்தியசாலை மூடப்பட்டு காணப்பட்டதோடு முள்ளியான் கிராம அலுவலர் பிரிவின் கீழ் வசிக்கும் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்துவந்தனர்.
வைத்திய தேவைகளை நிறைவேற்ற முடியாமல் சிரமப்பட்ட மக்கள் வைத்த தொடர் கோரிக்கைக்கு அமைய தற்பொழுது நித்தியவெட்டை வைத்தியசாலைக்கு புதியவைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்