Home Accident news யாழில் மற்றுமொரு கோர விபத்து-ஒருவர் பலி..!

யாழில் மற்றுமொரு கோர விபத்து-ஒருவர் பலி..!

உரும்பிராய் பகுதியில் பாதசாரி கடவைக்கு அருகாமையில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி இன்றைய தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உரும்பிராய் வடக்கு பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி அருமைநாயகம் (வயது 80) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை குறித்த முதியவர் வீட்டிற்கு அருகாமையில் உள்ள பகுதியில் குப்பையை கொட்டிவிட்டு வீட்டுக்கு வருவதற்காக வீதியை கடக்க முற்பட்டபோது, பலாலியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்த வேளை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Exit mobile version