யாழ்ப்பாண பிராந்திய
பொலிஸ், சிறுவர் மற்றும் பெண்கள் தடுப்பு பணியகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளுக்கான சனத்தொகை நிதியத்தின் (UNFPA) ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பாய் ஸ்மித் (Poi Smith) குறிந்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.
இன்றைய நிகழ்வில், ஐக்கிய நாடுகளுக்கான சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குனே அடேனி (Kune Adeni), யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.