வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று காலை ஆரம்பமானது. 117வது முறையாக இடம்பெறும் இப்போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று, நாளை, நாளை மறுதினம் என மூன்று தினங்கள் நடைபெறுகின்றன. இன்று காலை 9.30 மணியளவில் இரண்டு கல்லூரிகளினதும் கீதங்களுடன் போட்டி ஆரம்பமானது.
யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ், சிறுவர் மற்றும் பெண்கள் தடுப்பு பணியகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளுக்கான சனத்தொகை நிதியத்தின் (UNFPA) ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பாய் ஸ்மித் (Poi Smith) குறிந்த அலுவலகத்தை திறந்து வைத்தார். யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. இன்றைய நிகழ்வில், ஐக்கிய நாடுகளுக்கான சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குனே அடேனி (Kune Adeni), யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், பொலிஸ் அதிகாரிகள் […]
சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் தற்போது யாழ்ப்பாணம்- நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது. காலை 9 மணி தொடக்கம் 12:45 மணி வரை முதலாவது அமர்வும், மதியம் 2:30 மணி தொடக்கம் 4:50 மணிவரை இரண்டாவது அமர்வாகவும் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. நிகழ்வில் கடவுள் வாழ்த்து, மங்கல இசை, நடனம், விலுப்பாட்டு உள்ளிட்ட பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றது. நூற்றாண்டு விழாவில் ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி […]
யா/ கேவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் இன்றைய தினம் (22) பாடசாலை அதிபர் தலைமையில் கால் கோள் விழா சிறப்பாக இடம்பெற்றது. முதலாம் வருடத்தில் இணைந்து கொண்ட மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் புதிதாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட அதிபர் அவர்களும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார் குறித்த நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் தேசத்தின் குரல் வலையமைப்பினரால் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
யா/கெருடாவில் இந்து தமிழ்க்கலவன் பாடசாலையில் இன்று 22.03.2024 புது முக மாணவர்களின் வரவேற்பு விழா பாடசாலை அதிபர் திரு.சுதாகரன் தலைமையில் மிகசிறப்பாக நடை பெற்றது. புதுமுக மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் தேசியக் கொடியேற்றல்,மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமானது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பாடசாலையின் முன்னாள் மாணவரும் தற்போது யா/ வயாவிளான் மத்திய கல்லூரியின் பிரதி அதிபருமான திரு.தயாபரன் குருக்கள் அவர்களும், சிறப்பு ,விருந்தினர்களாக முன்பள்ளி ஆசிரியர்கள்,ஸ்தாபக வம்சத்தினர்,மத குருக்கள்,புலம்பெயர் பாடசாலை பழையமாணவர் […]
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் தரம் 1 மாணவர்களை இணைக்கும் நிகழ்வு இன்று(22.02.2024) காலை இடம்பெற்றது. பாடசாலை அதிபர் யோகலிங்கம் தலைமையில் ஆரம்பமான நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்கள்,விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் புதிதாக தரம் 1இற்கு காலடி எடுத்துவைக்கும் மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன்,வாழ்த்துக்களும் கூறப்பட்டது. குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள்,பங்குத்தந்தை,கிராம அலுவலர்,மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் […]
தரம் 1 மாணவர்களை இணைக்கும் நிகழ்வானது யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் இன்று 22/02/2024 காலை 9மணியளவில் வெகு சிறப்பாக ஆரம்பம் ஆனது. இன் நிகழ்வின் தலைமையக கல்லூரியின் அதிபர் ஜானப் என்எம் ஷாபி பிரதம விருந்தினராக Mr ஜகத் விஷந்த senior superintendent of பொலிஸ்(யாழ்ப்பாணம்),சிறப்பு விருந்தினாராகஜானப் ஆர் எம் சீராஜ் யாழ் முஸ்லீம் உதவும் கரங்கள் தலைவர் கெளரவா விருந்தினராக என் எம் அஜ்மல் யாழ் முஸ்லீம் உதவும் கரங்கள் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்த […]
தொழில்நுட்ப வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண இலங்கை தொழில்நுட்பவியல் சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பிரதம செயலாளர் எஜ்.எம்.சமன் பத்துலசேன, வடக்கு மாகாண பொறியியல் சேவைகள் முன்னாள் பிரதிப்பிரதம செயலாளர் சோ.சண்முகானந்தன், வடக்குமாகாண கட்டடங்கள் திணைக்கள முன்னாள் மாகாணப் பணிப்பாளர் செ.மோகனதேவன் உள்ளிட்ட […]
நேற்று (21) மாலை 04.00மணியளவில் வடமராட்சி கெருடாவில் அமைந்துள்ள அம்பிகை முன்பள்ளி மண்டபத்தில் கிராம முன்னாள் சமூர்த்தி உத்தியோகத்தர் திருமதி.சுகந்தினி அவர்களின் சேவை நலன் பாராட்டு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமானது. சமூர்த்தி உத்தியோகத்தர் திருமதி.சுகந்தினி தொடர்பாக விருந்தினர்கள் உரையாற்றியதுடன் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன் நினைவு பரிசும் வழங்கி கெளரவிக்கப்படார் குறித்த நிகழ்வில் வல்வெட்டித்துறை சமூர்த்தி வங்கி முகாமையாளர், மற்றும் உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என […]
நெல்லியடி மத்திய கல்லூரியின் ஊடக கழக தொடக்க விழா இன்று காலை 7:45 மணியளவில் பாடசாலையின் ஊடக கழக தலைவன் செல்வன் ஜோய் ஜொய்சன் தலமையில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக பிரதம விரைந்தனர், சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கள சுடர்கள் ஏற்றப்பட்டது. மங்கள சுடர்களை நிகழ்வின் பிரதம விருந்தினர் கவிஞர் முல்லை திவ்யன், சிறப்பு விருந்தினரும் ஒளியருவி நிறுவன உரிமையாளர் பிரபாகரன், பாடசாலை அதிபர் […]
இன்று 19 இலங்கை தேசிய நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரின் ஆலோசனைக்கமைய இந்திய 10000 வீட்டு திட்டத்தின் கீழ் வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட மஹாவ்வா 2ம் பிரிவில் 40 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் முன்னாள் நுவரெலியாய பிரதேச சபை தவிசாளாருமான வேலு யோகராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வலப்பனை பிரதேச சபையின் […]
வடமராட்சி கெருடாவில் தெற்கு தொண்டைமானாறு அம்பிகை முன்பள்ளியின் வருடாந்த(2023) பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வும் இன்று 18.02.2024 ஞாயிற்றுக்கிழமை இனிதே நடைபெற்றது முன்பள்ளி நிலைய தலைவர் த.இராகினி தலைமையில் முன்பள்ளி மண்டபத்தில் காலை 10.00 ஆரம்பமான நிகழ்வில் மாணவர்கள்,பெற்றோர்கள்,கிராமமட்ட தலைவர்கள்,ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாணவர்களின் கண்ணைக்கவரும் கலை நிகழ்வுகளான தனிநபர் நடனம்,குழுநடனம்,பேச்சுக்கள் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதோடு மாணவர்களுக்கான நினைவுச்சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் பரிசளித்தும் கெளரவிக்கப்பட்டனர்.
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...