யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்கையிட்டு யாழ் மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இன்று காலை 10.30 மணிக்கு மருதடி வீடியின் சந்தியில் இருந்து ஆரப்பமான மீனவர்களின் பேரணி இந்திய துணைத் தூதரகத்தை நோக்கி சென்றபோது இடையில் பொலிஸாரால் மறிக்கப்பட்டது.
பின்னர் கடற்றொழில் அமைப்புக்களை சேர்ந்த 8 நபர்கள் மாத்திரம் இந்திய துணைத் தூதரகத்துக்குள் மகஜர் வழங்குவதற்கா அனுமதிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இன்று (20) முற்றுகையிடப்படும் என யாழ் மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் கடந்த 18 ஆம் திகதி அறிவித்திருந்தன.
இதனால் இன்று காலை முதல் இந்திய துணைத் தூதரகத்தை சுற்றி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்ப கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் அமைச்சரின் அலுவலகத்திற்கும் சென்று மகஜரை கையளித்துள்ளனர்.