Home Accident news பாதுகாப்பற்ற ரயில் கடவையில் விபத்து; சுற்றுலா வழிகாட்டி மற்றும் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஆகியோர்...

பாதுகாப்பற்ற ரயில் கடவையில் விபத்து; சுற்றுலா வழிகாட்டி மற்றும் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஆகியோர் காயம்

மிதிகம ரயில் கடவையில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற ரயில், கார் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெலியத்தையிலிருந்து மாகோ நோக்கி சென்று கொண்டிருந்த ரஜரட்ட ரெஜின கடுகதி ரயில், பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கார் ஒன்றுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது காரில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பயணித்துள்ளனர். இச் சம்பவத்தில் காயமடைந்த உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி மற்றும் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில் செல்வதற்கான சமிஞ்சை போடப்பட்டிருந்த நிலையில், இந்த கார் பாதுகாப்பற்ற முறையில் பயணித்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version