வதிரி பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்
நேற்றைய தினம் காணாமல் போன இளைஞரைை உறவினர்கள் தேடிய போது அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
உயிரிழந்த இளைஞர் பல்துறைகளிலும் திறமையான வீரா் என்பது வதிரி டயமன்ஸ் அணி முக்கிய வீரராக விளங்கியவர் என்று தெரிக்கப்படுகின்றது
சம்பவத்தில் சுப்பிரமணியம் அரவி்ந் வயது 33 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது
மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது