விசுவமடு மாட்டு வண்டி சவாரியில் திருடு போன மோட்டார் சைக்கிள்-மூவரை தட்டி தூக்கிய பொலிஸ்..!{படங்கள்}

விசுவமடுவில் மாட்டுவண்டி சவாரியினை பார்வையிட வந்த  ஒருவரின் மோட்டார் சைக்கிள்  களவாடப்பட்ட சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு விசுவமடு

தொட்டியடி மாட்டுவண்டி சவாரி திடலில்  மாட்டுவண்டி சவாரி கடந்த 18.02.2024 அன்று இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்ததனர். இதன்போதே  வட்டக்கச்சியில் இருந்து குறித்த நிகழ்வை பார்வையிட வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தினையடுத்து  சம்பந்தப்பட்டவரினால்  புதுக்குடியிருப்பு பொலிஸில் நேற்றையதினம் (19) முறைப்பாடு  வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான பொலிஸ் சார்ஜன் குணவர்தன (70537) , பொலிஸ் கொஸ்தாபல்களான ஜெயசூரிய (72485) , பிரதீபன்

(88550), அருஸ் 91723 ஆகியோரின் தேடுதலில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய  பிரமந்தனாறினை சேர்ந்த மூவரினை கைது செய்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும்

 38, 27 ,25 வயதுடையவர்கள் என்பதும், குறித்த சந்தேக நபர்கள் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விசுவமடு மாட்டு வண்டி சவாரியில் திருடு போன மோட்டார் சைக்கிள்-மூவரை தட்டி தூக்கிய பொலிஸ்..!{படங்கள்}-oneindia news விசுவமடு மாட்டு வண்டி சவாரியில் திருடு போன மோட்டார் சைக்கிள்-மூவரை தட்டி தூக்கிய பொலிஸ்..!{படங்கள்}-oneindia news விசுவமடு மாட்டு வண்டி சவாரியில் திருடு போன மோட்டார் சைக்கிள்-மூவரை தட்டி தூக்கிய பொலிஸ்..!{படங்கள்}-oneindia news விசுவமடு மாட்டு வண்டி சவாரியில் திருடு போன மோட்டார் சைக்கிள்-மூவரை தட்டி தூக்கிய பொலிஸ்..!{படங்கள்}-oneindia news